Home உலகம் 7 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அதிசயம் – இரத்த சிவப்பாக மாறும் நிலா

7 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அதிசயம் – இரத்த சிவப்பாக மாறும் நிலா

0

வானில் அரிதாக தோன்றும் முழு இரத்த நிற சந்திர கிரகணம் இன்றைய தினம் செப்டம்பர் 7 ஆம் திகதி நிகழவுள்ளது. 

குறித்த விடயத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்.

ரத்த நிறத்தில் மிளிரும் 

அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது.

இந்த சமயத்தில் நிலாவை பார்ப்பதற்கு அடர் சிவப்பு நிறத்தில் தென்படும். அதாவது ரத்த நிறத்தில் மிளிரும் என்பதால் Blood Moon என்றும் அழைப்பர்.

இன்றைய சந்திர கிரகணம் என்பது 85 நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிகிறது. அதிகாலை 2.25 மணிக்கு பின்னர் புறநிழல் பகுதியில் இருந்து நிலா வெளியேறும். 

இதுபோன்ற சந்திர கிரகணம் 7 ஆண்டுகளுக்கு முன்பு வானில் தென்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முழுமையான கிரகணமாகத் தெரியும்

இந்த சந்திர கிரகணம் உலக மக்கள் தொகையில் சுமார் 77 சதவீதத்தினருக்கு முழுமையான அல்லது பகுதி கிரகணமாகத் தெரியும் என கூறப்படுகிறது.

குறிப்பாக ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளில் இருப்பவர்கள் பார்க்கலாம்.

மேலும் பசுபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்டிக், அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் இருந்து பார்த்து ரசிக்கலாம்.

இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா

NO COMMENTS

Exit mobile version