Home ஏனையவை ஆன்மீகம் பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது!

பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது!

0

ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உற்சாகத்தை வழங்கும் பொங்கல் பண்டிகை நாளை உலகவாழ் தமிழர்களால் கொண்டாடப்படவுள்ளது.

எமது, முன்னோர்கள் உழக்கு உதவும் சூரிய பகவானுக்கும், உழவுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி சொல்வதற்காக பயன்படுத்திய அழகான அறுவடை திருநாளே தைப்பொங்கள் திருநாளாகும்.

இந்த ஆண்டு பொங்கல் திருநாள் 14ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம்.

இதன்படி இந்த ஆண்டு தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பது தொடர்பான விளக்கத்தை அறிந்துக்கொள்ளலாம்.

சூரிய பொங்கல்

14ஆம் திகதி சூரிய பொங்கல் வைப்பதாக இருந்தால் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் பொங்கல் வைத்து சூரிய உதயம் ஆகும் போது அதனை நெய் வேத்தியம் செய்யலாம்.

எனினும், நாளை 09.03 மணிக்கு தை மாதம் பிறக்கின்றது.

அத்தோடு, நாளை செவ்வாய் கிழமை என்பதால் அன்றைய தினம் பகல் 3 முதல் மாலை 04.30 வரை ராகு காலம் ஆகும்.

மேலும்,  காலை 9 மணி முதல் 10.30 மணி வரை எம கண்ட நேரமாகும்.

அதனால் வீட்டில் பொங்கல் வைப்பவர்கள் காலை 07.30 முதல் 08.30 வரையிலான நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.

அந்த சமயத்தில் பொங்கல் வைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் காலை 10.30 முதல் 11.30 வரையிலான நேரத்திலும் பொங்கல் வைத்து, வழிபடலாம்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் தைப் பொங்கல் கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.

அந்தவகையில், மன்னார், கண்டி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் மக்கள் தைப் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் காட்சிகள் பின்வருமாறு அமைந்திருந்தது,

NO COMMENTS

Exit mobile version