Home இலங்கை அரசியல் வடக்கு கிழக்கில் தென்னிலங்கை சார்ந்த கட்சிகள் ஆட்சி அமைப்பது என்பது சிரமம்! சிறிநேசன்

வடக்கு கிழக்கில் தென்னிலங்கை சார்ந்த கட்சிகள் ஆட்சி அமைப்பது என்பது சிரமம்! சிறிநேசன்

0

பெரும்பாலும் வடக்கு கிழக்கில் தென்னிலங்கை சார்ந்த கட்சிகள் ஆட்சி அமைப்பது
என்பது சிரமமான விடயமாகும் ஏனெனில் அவர்களுடைய பெரும்பான்மை என்பது
பெரும்பான்மை இனத்தவர்கள் என்ற அடிப்படையில்தென்னிலங்கையிலேயே
சாத்தியமாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்
தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் புதன்கிழமை (14)
மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

என்றாலும் அது வடகிழக்கில் சாத்தியம் இல்லை. ஏனெனில்
தென்னிலங்கை சார்ந்த கட்சிகள் சமத்துவம் பேசினாலும் சமத்துவ அடிப்படையில்
தீர்வுகளை காண்பதற்கு முன்வரவில்லை என்பதை கடந்த ஆறு மாத காலத்திற்குள் மக்கள்
விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

புரிந்துணர்வு விட்டுக் கொடுப்பு, பெருந்தன்மை, என்ற அடிப்படையில் சபைகளை
அமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

அதனை எமது  உறுப்பினர்கள் தங்களுடைய
கௌரவத்தை தாழ்த்திக் கொள்ளாமல் முன்வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என
அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version