Home இலங்கை அரசியல் ஜப்பானிடம் லஞ்சம் கோரி அமைச்சரே தற்போது ரணிலின் அமைச்சரவையிலும் உள்ளார்: விஜயதாச ராஜபக்ச

ஜப்பானிடம் லஞ்சம் கோரி அமைச்சரே தற்போது ரணிலின் அமைச்சரவையிலும் உள்ளார்: விஜயதாச ராஜபக்ச

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கை அமைச்சர் ஒருவர் லஞ்சம் கோரினார் என்று ஜப்பான் குற்றம் சாட்டியதாக முன்னாள் நீதியமைச்சரும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்தபோது, ஜப்பானிடம் குறித்த அமைச்சரை அமைச்சர் லஞ்சம் கோரியதாக விஜயதாச, தேர்தல் பிரசார நிகழ்வு ஒன்றின்போது கூறியுள்ளார்.

முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

இந்தக் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, குறித்த அமைச்சரவை அமைச்சரை நீக்கியதாக விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அதே அமைச்சர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பதாக குறிப்பிட்ட விஜயதாச, அந்த அமைச்சரின் பெயரை குறிப்பிடவில்லை.

இந்தநிலையில்,1977ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் ஊழலை உண்மையாக கையாள்வதற்கு தலைவர்கள் எவரும் தயாராக இல்லை என்று விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version