Home இலங்கை அரசியல் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ, பேராயரை நேரில் சந்தித்துப் பேச்சு

ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ, பேராயரை நேரில் சந்தித்துப் பேச்சு

0

ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ச, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்
ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பேராயர் இல்லத்தில்
நடைபெற்றுள்ளது.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலுக்கான நீதியை வழங்கும்
பொருட்டு தன்னால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி
வேட்பாளர் விஜயதாஸ, பேராயருக்கு விளக்கமளித்தார்.

நீதிக்கான நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கத் தொடர்ந்தும்
நடவடிக்கை எடுப்பதாகவும் பேராயரிடம் விஜயதாஸ உறுதியளித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/wijeydasa-met-malcolm-ranjith-1724512905

NO COMMENTS

Exit mobile version