Home இலங்கை சமூகம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்து பிரதமர் பதவியில் மாற்றம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்து பிரதமர் பதவியில் மாற்றம்

0

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படகூடிய சாத்தியம் உண்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ச (Varuna Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரதி நிதி அமைச்சர் பதவியிலும் மாற்றம் செய்யப்படலாம் என அவர் கூறியுள்ளார்.

மேற்படி விடயங்களை அவர் தனது சமூக ஊடக கணக்கில் வெளியிட்ட காணொளி ஒன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவி

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பதிலாக பிமல் ரத்நாயக்க பிரதமராக நியமிக்கப்படலாம்.

மேலும், பிரதி நிதி அமைச்சர் பதவிக்கு ஒரு தொழிலதிபர் நியமிக்கப்படலாம் என்பதற்கான தகவல்கள் கிடைத்துள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரபூர்வ தகவல்

இதேவேளை, வருண ராஜபக்ச, கடந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) மேல் மாகாண சபை குழுத் தலைவராக கடயைமாற்றியுள்ளார்.

அத்துடன், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.

இந்நிலையில், பிரதமர் பதவியில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியோ அல்லது மக்கள் விடுதலை முன்னணியோ இதுவரையில் அதிகாரபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/64bECvN3KGQ

NO COMMENTS

Exit mobile version