தவளை போல் கட்சி தாவியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ள நிலையில் மற்றுமொரு மொட்டுவின் எம்.பியும் ரணிலுக்கு தனது ஆதரவை தெரிவிததுள்ளார்.
இதன்படி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க(Wimalaweera Dissanayake) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு(Ranil Wickremesinghe) தனது ஆதரவை வழங்கவுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஆதரவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு மலர் வீதியில் உள்ள அவரது அரசியல் காரியாலயத்தில் சந்தித்து ஆதரவு வழங்குவதாக உறுதியளித்தார்.
மகிந்தவிற்கு விசுவாசமான மொட்டு எம்பிக்கள் தொடர்ச்சியாக ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.