Home இலங்கை அரசியல் மைத்திரி வீட்டின் முன் கத்திகூச்சலிட்ட பெண் – காவல்துறை நடவடிக்கை

மைத்திரி வீட்டின் முன் கத்திகூச்சலிட்ட பெண் – காவல்துறை நடவடிக்கை

0

மைத்ரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) உத்தியோகபூர்வ இல்லமுன்றிலில் பெண்ணொருவர் கத்திகூச்சலிட்டு முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு அவ்விடத்திலிருந்து சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் கொழும்பு (colombo) – கறுவாத்தோட்டம் ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள மைத்திரிபாலவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், அவரை கைது செய்வதற்காக தீவிர விசாரணைகளை கறுவாத்தோட்டப் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மேற்படி சம்பவம் குறித்து முறைப்பாடளித்துள்ளதாக குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான காவல்துறை உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பெண் வந்திறங்கிய வெள்ளைநிற காரின் இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த பெண் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் சகோதரரும் வர்த்தகருமான டட்லி சிறிசேனவை குறிப்பிட்டே கடும் வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்ததாக மேற்படி காவல்துறையினர் உத்தியோகத்தர் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண் வந்திறங்கிய காரின் இலக்கத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கறுவாத்தோட்டப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version