Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்

தமிழர் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்

0

முல்லைத்தீவு (Mullaitivu) – மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வீட்டில் வெட்டு
காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில்
வசித்து வந்த ராமசாமி ராமயி எனும் 70 வயதுடைய பெண் வீட்டில் சடலமாக
கிடப்பதாக கிராமத்தவர்களால் நேற்று (22) மாலை மாங்குளம் காவல்துறையினருக்கு தகவல்
வழங்கப்பட்டது.

இந்தநிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற மாங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு
வருவதோடு இன்று (23) காலை கிளிநொச்சி தடயவியல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை
தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 காவல்துறையினர் விசாரணை

உடலத்தை நீதிபதி பார்வையிட்டதன் பின்னர்
மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணிடமிருந்து நகை உள்ளிட்ட பொருட்களை களவாடுவதற்காக வெட்டிக் கொலை
செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் மாங்குளம் காவல்துறையினர்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version