Home இந்தியா விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்

விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்

0

மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின்(Vijayakanth) நினைவிடத்திடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச் சின்னமாக இது போற்றப்படுகிறது.

விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நிலை குறைபாட்டால் காலமானார்.தொடர்ந்து, அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

உலக சாதனை விருது

அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் இலட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தற்போது வரை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு(Chennai) பயணம் மேற்கொள்ளும் மக்கள் நிச்சயம் விஜயகாந்தின் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தி வருவதோடு மேலும் பலர் முடி காணிக்கையும் செலுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் விஜயகாந்தின் ரசிகர்களுக்காக நினைவு இடத்தில் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

சி.எஸ்.கே வில் இருந்து விலகும் முக்கிய வீரர்…பரிசுடன் வழியனுப்பி வைத்தார் தோனி!

விஜயகாந்த் நினைவிடம்

இந்த நிலையில் தான் விஜயகாந்தின் நினைவிடத்தில் இதுவரை 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.

அது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இதனை உலக சாதனையாக அங்கீகரித்து லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் முதல் நினைவு சின்னமாகவும் விஜயகாந்தின் நினைவு இடம் போற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version