Home உலகம் பேய் நகரமாக டெல் அவிவ்…! ஈரான் விமான தளங்கள் மீது சரமாரி தாக்குதல்

பேய் நகரமாக டெல் அவிவ்…! ஈரான் விமான தளங்கள் மீது சரமாரி தாக்குதல்

0

ஈரானின் (Iran)15 போர் விமானங்கள், உலங்குவானூர்திகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களான போர்டோ (Fordow), நதான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) மீது அமெரிக்க இராணுவம் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நிறைவு செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா நேற்று நேரடியாக தாக்குதல் நடத்தியும், மோதலில் இருந்து பின் வாங்காத ஈரான், சில மணி நேரங்களில் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து சக்திவாய்ந்த, ‘கொரம்ஷார் – 4’ ஏவுகணையை ஈரான் வீசியது.

பேய் நகரமாக காட்சி

ஈரானின் இந்த தாக்குதலில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் தாக்குதலில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பேய் நகரமாக காட்சியளிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏவுகணை தாக்குதல் தொடர்வதற்கு முன்னர் இஸ்ரேலில் உள்ள சைரன் ஒலிக்கும். ஆனால், சைரன் ஒலிப்பதற்கு முன்னரே இந்த முறை தாக்குதல் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

இந்நிலையில், ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது.

ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், உலங்குவானூர்திகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானில் ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இஸ்ரேல் அரசின் பாதுகாப்பை உறுதி செய்ய, தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://www.youtube.com/embed/M9Gp-C-eZRA

NO COMMENTS

Exit mobile version