Home உலகம் பிரேசில் உயர் நீதி மன்றத்தினை கடுமையாக விமர்சித்துள்ள எலான் மஸ்க்

பிரேசில் உயர் நீதி மன்றத்தினை கடுமையாக விமர்சித்துள்ள எலான் மஸ்க்

0

பிரேசில் நாட்டில் எக்ஸ் (X) தளத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு உயர் நீதிமன்றத்தினை எலன் மஸ்க் (Elon Musk) கடுமையாக விமர்சித்துள்ளார்.

அண்மையில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கியுள்ளார்.

இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் (Brazil) நாட்டில் எக்ஸ் தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும். தவறினால் பிரேசில் எக்ஸ் நிறுவனம் முடக்கப்படும் என உத்தரவிட்டு இருந்தது.

எலான் மஸ்க்

பிரேசில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவையும் ஏற்க எலான் மஸ்க் மறுத்துள்ளார். இதனையடுத்து, எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து பிரேசில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்திற்குள் எக்ஸ் தளத்தை பிரேசில் நாட்டிலிருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நீதிபதி அலெக்ஸ்ண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திரமான பேச்சு

இவ்வாறானதொரு பின்னனியில், பிரேசில் உயர் நீதிமன்றத்தினை விமர்சித்து “சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம் என தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “பேச்சுரிமையை இழக்கும்போது, ​​ஜனநாயகத்தை இழக்கிறோம். பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார்“ என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version