உலக கின்னஸ்(guinness) சாதனை நாளை முன்னிட்டு, உலகின் உயரமான பெண்ணான துருக்கியின்(turkey) ருமெய்சா கெல்கி மற்றும் இந்தியாவின்(india) ஜோதி அம்கே ஆகியோர் கின்னஸ் சாதனை ஐகான்களாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், லண்டனில்(london) இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
ஆராய்ச்சியாளரான 7 அடி உயரம் கொண்ட ருமெய்சா(Rumeysa Gelgi) (27) ஆங்கிலத்திலும், 2 அடி உயரம் கொண்ட இந்தியாவின் ஜோதி அம்கே(Jyoti Amge) (30) ஹிந்தியிலும் உரையாடினர்.
Rumeysaவின் உயரம், 215.16 சென்றிமீற்றர்கள், அதாவது, 7 அடி 1 அங்குலம்.Jyotiயின் உயரம், 62.8 சென்றிமீற்றர்கள், அதாவது, 2 அடி 1அங்குலம்.
கின்னஸ் சாதனை நாள்
கின்னஸ் உலக சாதனை நாளின் 20ம் ஆண்டு விழாவையொட்டி, இரு பெண்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக, கின்னஸ் சாதனைப் புத்தக தலைமை ஆசிரியர் கிரெய்க் க்ளெண்டே தெரிவித்தார்.
இருவருக்கும் உயரத்தில் மிகப்பெரிய வித்தியசாம் என்பதால், என்னால் Jyotiயை முகத்துக்கு நேராகப் பார்த்து பேசமுடியவில்லை என்பதுதான் வருத்தம் என தெரிவித்தார் Rumeysa.
https://www.youtube.com/embed/QD2agPoX98I