Home உலகம் இந்தியாவில் ஐஸ்கிறீம் விற்கும் பாகிஸ்தான் முன்னாள் எம்.பி :குடும்பத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

இந்தியாவில் ஐஸ்கிறீம் விற்கும் பாகிஸ்தான் முன்னாள் எம்.பி :குடும்பத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

0

 பாகிஸ்தான்(pakistan) முன்னாள் எம்.பி., ஒருவர் இந்தியாவின்(india) ஹரியானாவில் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வருகிறார். அவரது குடும்பத்தினர், விசா விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, நாடு கடத்தல் நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளமை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. 

ஹரியானாவின் பதேஹாபாத் மாவட்டத்தில் வசிக்கும் பாகிஸ்தானின் முன்னாள் எம்.பி. தபயா ராம் என்பவரே ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவராவார்.

பாகிஸ்தானியர்களை வெளியேற உத்தரவிட்டதால் சிக்கல்

பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டமையே குறித்த முளன்னாள் எம்.பியின் குடும்பத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

 மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து உள்ளூர் காவல்துறையினர் தபயா ராமின் குடும்பத்தினரை விசாரணைக்காக அழைத்தனர். இருப்பினும், பின்னர் அவர்கள் பதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள ரதியா தெஹ்சிலின் ரத்தன்கர் கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

1988ம் ஆண்டில், லோஹியா மற்றும் பக்கார் மாவட்டங்களிலிருந்து பாகிஸ்தான் நாடாளுமன்றுக்கு ராம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 பாகிஸ்தானிலிருந்து 2000 ஆம் ஆண்டு வெளியேற்றம்

அவரது உறவினரான ஒரு பெண், மத பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டார். ராம், பாகிஸ்தான் உயர் ீதிமன்றில் நீதி கேட்டபோது, ​​அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஏமாற்றமடைந்து, தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்த அவரது குடும்பம், 2000ம் ஆண்டில் பாகிஸ்தானை விட்டு வெளியேறியது.

 அப்போதிருந்து, ஒரு சைக்கிள் ரிக்சாவில் ஐஸ்கிரீம் விற்று தனது பெரிய குடும்பத்தை ராம் காப்பாற்றி வருகிறார்.

 

NO COMMENTS

Exit mobile version