Home சினிமா மணி சாரை பார்த்தா எனக்கு பயமா? பல நாள் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த சிம்பு

மணி சாரை பார்த்தா எனக்கு பயமா? பல நாள் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த சிம்பு

0

சிம்பு 

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் முதல் முறையாக கமலுடன் இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்தை மணிரத்னம் இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து சமீபத்தில் முதல் பாடல் வெளிவந்தது. மேலும் இப்படத்திற்கான ப்ரோமோஷனையும் படக்குழு துவங்கிவிட்டனர். கமல், சிம்பு மற்றும் த்ரிஷா மூவரும் இணைந்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்தனர்.

42 வயதை எட்டிய நடிகை த்ரிஷா.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

இந்த பேட்டியில், பல நாள் சர்ச்சைக்கு நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, சிம்பு படப்பிடிப்புக்கு லேட்டா வராரு, ஆனால் மணி சார் படத்திற்கு Correct போய்டுறாரு என்கிற விமர்சனம் சிம்பு மீது வைக்கப்பட்டது.

விளக்கம் கொடுத்த சிம்பு

இதுகுறித்து பேசிய சிம்பு “மணி சார் படம் எல்லாம் Correct-ஆ போறீங்களே அது எப்படி, அவர் மேல பயமானு கேக்குறாங்க. சத்தியமா அவர் மேல பயம் எல்லாம் இல்ல. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இதுவரை நான் மணி சார் படத்திற்கு ஒரு நாள் கூட லேட்டா போனது கிடையாது. மணி சார் வரதுக்கு முன்னாடி கூட நான் போய் இருக்கிறேன்.

அதற்குக் காரணம், டைரக்டரையும் தயாரிப்பாளரையும் நம்பி ஒரு நடிகர் நடிக்க போகும்போது சொன்ன நேரத்தில் படத்தை எடுக்கணும். முதலில் டைரக்டர் டைமுக்கு வரணும்.

அதே மாதிரி, மணி சார் படப்பிடிப்புக்கு வந்துட்டு இதை இப்படி பண்ணலாமா அப்படி பண்ணலாமா என்றெல்லாம் யோசிக்க மாட்டார். வந்தாருன்னா இன்னைக்கு என்ன எடுக்கணும்னு அவருக்கு தெரியும். சொன்ன நேரத்தில் படத்தை முடிப்பார். ஒரு நடிகருடைய டைமை, கால்ஷீட்டை வேஸ்ட் பண்ண மாட்டார். பேமென்ட் கரெக்டா வரும். சொன்ன டைம்ல படம் ரிலீஸ் ஆகும்” என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version