Home இலங்கை அரசியல் வெறும் எலும்புக்கூடு அரசியல் போக்குடைய சஜித்தின் நகர்வு: யோதிலிங்கம் வெளிப்படை

வெறும் எலும்புக்கூடு அரசியல் போக்குடைய சஜித்தின் நகர்வு: யோதிலிங்கம் வெளிப்படை

0

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெறும் எலும்புக்கூடு என அரசியல்
ஆய்வாளரும், சட்டத்தரணியும்மான
சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலெயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி தேர்தல்

”ஜனாதிபதி தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. மூன்று பிரதான
வேட்பாளர்களும் தமது தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு விட்டனர்.

தமிழ்
மக்களைப் பொறுத்தவரை மூன்று தேர்தல் அறிக்கைகளும் பூச்சியம் தான்.

மாகாண சபை
பற்றிக் கூட முழுமையாக கூறுவதற்கு அவை தயாராக இல்லை. பொலிஸ், காணி அதிகாரங்கள்
பற்றி மூச்சைக் கூட காணோம்.

ஆக்கிரமிப்பு பொறுப்புக்கூறல் விடயங்களிலும் இதே
நிலை தான.; இவர்களுடைய இயலாநிலை தமிழ்ப்; பொது வேட்பாளரை மேலும்
நியாயப்படுத்தியுள்ளது.

அநுரகுமார திசநாயக்கா போர் குற்ற விசாரணை
நடாத்தப்படும் என முதல்நாள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்.

தென்னிலங்கையில் எதிர்ப்பு ஏற்பட்டதால் அடுத்த நாளே அதனை வாபஸ் பெற்றார்.
நாமல்ராஜபக்ச வழக்கம் போல 13வதுதிருத்தம் நடைமுறைப்படுத்துவதையே ஏற்கமாட்டோம்
எனக் கூறியிருக்கின்றார்.

சிங்கள தேசத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதைக் கூறமுடியாத நிலை. அநுரகுமார திசநாயக்காவின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது என்றே செய்திகள்
கூறுகின்றன.

சிங்கள இளைஞர்கள்

குறிப்பாக சிங்கள இளைஞர்கள் அதிகளவில் அனுரா பக்கம் நிற்பது போலவே
தோற்றம் தெரிகின்றது.

மலையகத்திலும் முன்னரை விட அதன் செல்வாக்கு
அதிகரித்துள்ளது. ஒவ்வொரு லயன்களாக சென்று அவர்கள் பிரசாரம் செய்து
வருகின்றனர்.

சிறு சிறு கூட்டங்களையும் நடாத்துகின்றனர். பெருந்தோட்டங்களில்
தொழிற்சங்க ஆதிக்கம் அதிகமாக இருப்பதினால் அவர்களின் முயற்சிகள் எவ்வளவு தூரம்
வாக்குகளாக மாறும் என்பதை சொல்வது கடினம்.

படித்த நடுத்தரவர்க்கத்தினரிடையே
அதன் செல்வாக்கு அதிகரிக்கலாம்.
சஜித் பிரேமதாசாவின் பலம் என்பது அதன் ஐக்கிய முன்னணியின் பலம் தான்.

மலையக,
முஸ்லீம் கட்சிகளின் அதனுடன் இணைந்திருப்பது அதற்கு ஒரு சேமிப்புப் பலம். எனினும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கட்சி மாறியமை தமிழ்
முற்போக்கு கூட்டணியின் ஆதரவில் ஒரு கறுப்புப் புள்ளியைக் குத்தியுள்ளது.

வேலுகுமார் – திகாம்பரத்தின் பகிரங்க கைகலப்பும் கறுப்புப் புள்ளியை
பெரிதாக்கியுள்ளது எனலாம்.

தமிழ் முற்போக்கு கூட்டணி

வேலுகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு
செய்யப்பட்டமைக்கு அவரது செல்வாக்கு ஒரு காரணமாக இருந்த போதிலும் தமிழ்
முற்போக்கு கூட்டணியின் அடையாளமும் முக்கிய காரணம்.

முஸ்லீம் மக்களில் ஒரு
பிரிவினரும் தமது விருப்ப வாக்குகளில் ஒன்றை அவருக்கு அளித்திருந்தனர்.

அதுவும் வெற்றியில் பங்கு செலுத்தியிருக்கின்றது. எதிர்காலத்தில் வேலுகுமார்
வெற்றியடைவது அவருக்கு பாரிய சவாலாகவே இருக்கும்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version