Home உலகம் தொடரும் போர் பதற்றம் : இஸ்ரேல் அரசுக்கு ஹமாஸ் விடுத்த எச்சரிக்கை

தொடரும் போர் பதற்றம் : இஸ்ரேல் அரசுக்கு ஹமாஸ் விடுத்த எச்சரிக்கை

0

இஸ்ரேலிலிருந்து (Israel) சிறபிடிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை பிணமாகப் பார்க்க வேண்டிய அபாய நிலை உருவாகக்கூடும் என இஸ்ரேல் அரசுக்கு ஹமாஸ் (Hamas) அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியிருப்பதுடன், காசா பகுதியில் தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது. 

இதனால் போர் நிறுத்தத்துக்குப் பின், காசாவில் (Gaza) நடத்தப்பட்டுள்ள பல்வேறு கட்ட தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50,000ஐ கடந்துள்ளது.

ஹமாஸ் எச்சரிக்கை

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) கவனத்துக்குச் செல்லும் வகையில், ஹமாஸ் தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ள காணொலியில், இஸ்ரேலிய பணயக் கைதிகளாகச் சிக்கியிருக்கும் எல்கானா போஹ்போட் மற்றும் யோசேஃப்-ஹைம் ஒஹானா ஆகிய இருவரையும் சித்ரவதை செய்ய முற்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

சமூக வலைதளமான டெலிகிராமில் ஹமாஸ் பயன்படுத்தும் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த காணொலியில், ஹமாஸ் பிடியிலிருக்கும் அவர்கள் இருவரும் தாங்கள் எதிர்கொண்டு வரும் கடினமான சவால்களை எடுத்துச் சொல்லி போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை 

குறித்த பதிவில், ‘நேரம் விரைவாகக் கடந்து கொண்டிருக்கிறது’என்று குறிப்பிட்டிருக்கின்றது ஹாமாஸ் தரப்பு. 

அத்துடன், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை மட்டுமே உங்கள் நாட்டு மக்களை மீண்டும் தாயகம் அழைத்து வர வழிவகை செய்யும் என்று குறிப்பிட்டு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட இஸ்ரேலை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர் ஹமாஸ்.

NO COMMENTS

Exit mobile version