Home இலங்கை சமூகம் இசை நிகழ்ச்சியை பார்வையிட சென்றிருந்த இளைஞனுக்கு ஏற்பட்டுள்ள விபரீதம்

இசை நிகழ்ச்சியை பார்வையிட சென்றிருந்த இளைஞனுக்கு ஏற்பட்டுள்ள விபரீதம்

0

காலி – எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கிணற்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று (08) பிற்பகல் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைஹேன, மட்டக்க பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

பொலிஸார் விசாரணை

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் எல்பிட்டிய பொது விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிடச் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Source: https://tamilwin.com/article/young-boy-death-in-musical-show-1728443563

NO COMMENTS

Exit mobile version