Home இலங்கை சமூகம் யாழில் தீயில் எரிந்த இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் தீயில் எரிந்த இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு

0

யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலையில் தீயில் எரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்றைய தினம் (27) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான நிருத்திகா (Niruthika) என்ற 28 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்ப பிரச்சினை 

குறித்த பெண் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் கடந்த 25 ஆம் திகதி குடும்ப பிரச்சினை காரணமாக தீயிட்டு எரியூட்டப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் (A. Jayapalasingam) மேற்கொண்டுள்ளாார்.

அத்தோடு, குறித்த பெண்ணுக்கு அவரது கணவனே தீ வைத்ததாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இருப்பினும், கணவன் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/young-family-woman-burnt-to-death-in-yali-1724802274

NO COMMENTS

Exit mobile version