Home இலங்கை அரசியல் தமிழரசுக்கட்சி அழைப்பு: யாழிற்கு வருகை தந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள்

தமிழரசுக்கட்சி அழைப்பு: யாழிற்கு வருகை தந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள்

0

 இலங்கை தமிழரசு கட்சியின் அழைப்பின் பேரில் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல்
கட்சிகளின் இளம் தலைவர்கள் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றினை
மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொண்ட இளம்
அரசியல் தலைவர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் செய்ததன் தொடர்ச்சியாக வடக்கு
மாகாண விஜயம் அமைந்துள்ளது.

வடக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் 

இவ் விஜயத்தின் போது வடக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில்
கள விஜயங்கள் மேற்கொண்டு இளம் அரசியல் தலைவர்களுக்கு தெளிவு படுத்தப்படஉள்ளது. 

NO COMMENTS

Exit mobile version