Home இலங்கை குற்றம் யாழில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

யாழில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

0

குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா கலந்த மாவா வைத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கை

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குருநகர் பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Source: https://tamilwin.com/article/youth-arrested-with-cannabis-in-jaffna-1750344354

NO COMMENTS

Exit mobile version