Home உலகம் ரஷ்யாவுடனான போரை நிறுத்த முடியும்! ஜெலன்ஸ்கி முன்வைக்கும் நிபந்தனை

ரஷ்யாவுடனான போரை நிறுத்த முடியும்! ஜெலன்ஸ்கி முன்வைக்கும் நிபந்தனை

0

ரஷ்யாவுடனான(Russia) போரை நிறுத்துவதற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் ரஷ்யாவுடனான போரை நிறுத்த முடியும் என்று நிபந்தனை
ஒன்றை அவர் முன்வைத்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்து செல்கின்றது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்து வருகிறது.

ரஷ்யா –  உக்ரைன் தாக்குதல்கள்

இந்நிலையில், சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷ்யா, முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது.

இதேவேளை, உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புதின் எச்சரிக்கை விடுத்ததுடன் உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version