Home இலங்கை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் இலங்கை மீதான எதிர்பார்ப்பு

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் இலங்கை மீதான எதிர்பார்ப்பு

0

உக்ரைனுக்கான (Ukraine) புதிய இலங்கைத் தூதர் ஹசந்தி திசாநாயக்க, அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelenskyy) சந்தித்துள்ளார்.

உக்ரைனுக்கான இலங்கை மற்றும் குவாத்தமாலாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்கள் நற்சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அமைதி

அதன்போது, கருத்து வெளியிட்ட உக்ரைன் ஜனாதிபதி, தனது நாடு அமெரிக்க பிரதிநிதிகளுடன் பயனுடைய கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அமைதியை அடைய பாடுபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பேச்சுவார்த்தை செயல்முறைக்குத் தேவையான அடித்தளங்களை அமைப்பதற்கு உக்ரைன் பல நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளதாகவும், இந்த நிலைப்பாட்டிற்கு ஏனைய தரப்பினரதும் ஆதரவைப் பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

இலங்கையின் ஆதரவு

அதன்படி, ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதியை அடைவதில் இலங்கையின் ஆதரவையும் தனது நாடு எதிர்பார்ப்பதாக உக்ரைன் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வர்த்தகம், கல்வி, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ மறுவாழ்வு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதில் உக்ரைன் ஆர்வமாக இருப்பதாகவும் ஜனாதிபதி தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version