Home உலகம் உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம்: ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பு

உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம்: ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பு

0

உக்ரைன் (Ukraine) மற்றும் ரஷ்யா (Russia) போரை உறுதியாக நிறுத்த முடியும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில், டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தற்போது காசாவில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.

தாக்குதல்கள் 

இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

மேலும் தெரிவித்த ஜெலன்ஸ்கி, “ஒரு பிராந்தியத்தில் போரை நிறுத்த முடியும் என்றால் உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் உள்ளிட்ட மற்ற போர்களை உறுதியாக நிறுத்த முடியும்.

நமது எரிசக்தி அமைப்பின் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் குறித்து ட்ரம்பிடம் தெரிவித்தேன்.

வலுப்படுத்த நடவடிக்கை

மேலும் எங்களுக்கு ஆதரவளிக்க அவர் தயாராக இருப்பதை நான் பாராட்டுகின்றேன்.

நமது வான் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து நாங்கள் விவாதித்தோம்.

உண்மையான ராஜதந்திரத்தில் ஈடுபட ரஷ்ய தரப்பில் தயார்நிலை இருக்க வேண்டும், இதை வலிமை மூலம் அடைய முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version