Home உலகம் விரைவில் உயிரிழக்கப்போகும் புடின்: காரணத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜெலன்ஸ்கி!!

விரைவில் உயிரிழக்கப்போகும் புடின்: காரணத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜெலன்ஸ்கி!!

0

ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) விரைவில் உயிரிழந்துவிடுவார் என உக்ரைன் (Ukraine) ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியுள்ளமை தற்போது சர்வதேச பரப்பில் பேசுப்பொருளாகியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடைய உடல் நல பாதிப்புகள் குறித்து ஏராளம் வதந்திகள் தற்போது தொடர்ந்து பரவிவருகின்றன. 

புடினுடைய முகம் வீங்கியிருப்பது, கை கால்கள் நடுக்கம், கட்டுப்பாடின்றி வளையும் கால்கள் ஆகிய விடயங்கள் புடினுடைய உடல் நலம் மோசமடைந்துவருவதற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியம்

இப்படி புடினுடைய உடல் நலம் தொடர்பில் செய்திகள் பரவிவரும் நிலையில், புடின் விரைவில் இறந்துவிடுவார் என உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஜெலன்ஸ்கி நேற்று (27.03.2025) பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்தித்த நிலையில், புடின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உள்ளிருந்தே ஐரோப்பிய ஒன்றியத்தைத் தாக்க முயல்கிறார் என்று கூறியுள்ளார்.

அதாவது, ஐரோப்பிய நாடான ஹங்கேரி ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அதை சுட்டிக்காட்டித்தான், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உள்ளிருந்தே ஐரோப்பிய ஒன்றியத்தைத் தாக்க புடின் முயல்கிறார் என்று கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி. 

மேலும் புடினுடைய பிரித்தாளும் சூழ்ச்சியால் கோபமடைந்துள்ள ஜெலன்ஸ்கி, புடின் விரைவில் இறந்துவிடுவார் என்றும், விரைவில் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version