Home இலங்கை கட்டுநாயக்கவில் 1.18 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்துடன் வர்த்தகர் கைது

கட்டுநாயக்கவில் 1.18 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்துடன் வர்த்தகர் கைது

0
image

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 18 இலட்சத்து 85 ஆயிரத்து 514 ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் 53 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (08) காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மாத்தளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்காமலும் தேவையான அனுமதிப்பத்திரங்கள் இன்றியும் தங்கத்தை நாட்டிற்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சந்தேகநபரின் பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 271 கிராம் 480 மில்லிகிராம் எடையுடைய 12 தங்க மாலைகள், 10 தங்கக் காப்புகள் மற்றும் 2 தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று காலை சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சுங்கத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணை மற்றும் பரிசோதனைகளின் பின்னர், ஒரு கோடியே 18 இலட்சத்து 85 ஆயிரத்து 514 ரூபாய் பெறுமதியான தங்கம் அரசுடைமையாக்கப்பட்டதுடன், சந்தேகநபருக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/trader-arrested-with-gold-worth-118-crore-rupees-in-kattunayakkan-1783592312

NO COMMENTS

Exit mobile version