ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு கைது செய்துள்ளமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கு நாடு முழுவதும் சென்று மக்கள் கூட்டங்களை நடத்துவதற்கு உள்ள ஜனநாயக உரிமை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷவுக்கும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன், அரசியல் தலைவர்களின் மக்கள் ஆதரவை கைது நடவடிக்கைகளின் மூலம் இல்லாதொழிக்க முடியாது என்றும், ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷ ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Source: https://samugammedia.com/namals-arrest-unp-strongly-condemns-1788575576
