Home இலங்கை விபத்துகளால் இலங்கையில் தினமும் 30 பேர் உயிரிழப்பு: சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவல்!

விபத்துகளால் இலங்கையில் தினமும் 30 பேர் உயிரிழப்பு: சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவல்!

0
image

இலங்கையில் பல்வேறு விபத்துகள் காரணமாக நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 30 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் விசேட மருத்துவ நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

இலங்கையில் விபத்துக்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 8,000 முதல் 10,000 பேர் வரை உயிரிழக்கின்றனர். அதாவது சராசரியாக ஒவ்வொரு 3 மணித்தியாலத்திற்கும் 4 பேர் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக வீதி விபத்துக்கள் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. ஆனால், கீழே வீழ்ந்து ஏற்படும் விபத்துகள், நீரில் மூழ்குதல், மின்சாரம் தாக்குதல் மற்றும் பாம்புக் கடி போன்ற பிற காரணங்களாலும் கணிசமான எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகின்றன.

இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு மூலம் தடுக்கக்கூடியவை ஆகும். போதிய முன்னெச்சரிக்கை இல்லாததால் இவ்வளவு உயிர்கள் பலியாவது தேசிய அளவிலான பெரும் துயரமாகும்.

எனவே, வீடு, பணியிடம், பாடசாலை மற்றும் வீதிகளில் முறையான பாதுகாப்பு நடைமுறைகளைக் தீவிரமாகக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த விபத்து மரணங்களைக் குறைக்க முடியும் என மருத்துவ நிபுணர் சமித்த சிறிதுங்க வலியுறுத்தியுள்ளார்.

Source: https://samugammedia.com/30-people-die-every-day-in-sri-lanka-due-to-accidents-shocking-news-from-the-health-ministry-1783056283

NO COMMENTS

Exit mobile version