Home உலகம் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்க தயார் நிலையில் 05 இலட்சம் இராணுவ வீரர்கள்

உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்க தயார் நிலையில் 05 இலட்சம் இராணுவ வீரர்கள்

0

உக்ரைனுக்கு உதவ நேட்டோ கூட்டமைப்பைச் சேர்ந்த 5 இலட்சம் இராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக நேட்டோ தெரிவித்துள்ளது. 

பெல்ஜியத்தை தலைமையிடாக கொண்ட நேட்டோ அமைப்பில் இறுதியாக சுவீடன் நாடு இணைந்துள்ளது.

இந்த கூட்டமைப்பில் தற்போது 32 நாடுகள் உள்ளன. இந்த கூட்டமைப்பில் இணைய உக்ரைனும் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.

ஆனால் சில உறுப்பு நாடுகளின் எதிர்ப்பால் உக்ரைனால் இன்னும் இணைய முடியவில்லை.

போர் தொடுத்த ரஷ்யா

இதற்கிடையே உக்ரைனின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அதன் மீது போர் தொடுத்தது.

எனவே உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் பல்வேறு உதவிகளை வழங்குகின்றன. அவற்றின் மூலம் உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

நேட்டோ இராணுவம்

இந்தநிலையில் நேட்டோ கூட்டமைப்பைச் சேர்ந்த 5 லட்சம் இராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

எனவே ரஷ்யாவை தனிமைப்படுத்தவும், உக்ரைனுக்கு வழங்கப்படும் இராணுவ உதவிகளை மேலும் அதிகரிக்கவும் முயற்சிகள் நடைபெறுவதாக நேட்டோ செய்தித்தொடர்பாளர் பரா தக்லல்லாஹ் கூறினார்.

NO COMMENTS

Exit mobile version