Home உலகம் தொடரும் போர் பதற்றம்: இஸ்ரேல் வான் தாக்குதலில் 10 பலஸ்தீன பாதுகாப்புப்படை வீரர்கள் பலி

தொடரும் போர் பதற்றம்: இஸ்ரேல் வான் தாக்குதலில் 10 பலஸ்தீன பாதுகாப்புப்படை வீரர்கள் பலி

0

இஸ்ரேல் (Israel)  இராணுவம் காசாவின் ரஃபா நகரில் வணிக பொருட்களை பாதுகாத்து வந்த பாதுகாப்புப்படை வீரர்கள் மீது வான்தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வான்தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்தவர்கள் உடல்கள் மற்றும் காயம் அடைந்தோர் ஐரோப்பிய காசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வான்தாக்குதல்

இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் கருத்து ஏதுவும் தெரிவிக்கவில்லை என்பதுடன்  சமீபத்தில் மேற்கு கரையில் இருந்து காசா முனைக்கு வணிக பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அதிகாரிகள் அனுமதி அளித்திருந்திருந்தனர்.

இதனால் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் வணிக பொருட்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள காசா முனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

வணிக பொருட்கள்

கடந்த திங்கட்கிழமை இது போன்று வணிக பொருட்கள் கொண்டு சென்றபோது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், 2அவது முறையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல் தாக்குதலால் 37396 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version