Home உலகம் அவுஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி

அவுஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி

0

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இன்று (14) மதியம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் சுமார் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள் எனவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்

துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றையவர் காவல்துறையின் பிடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களைக் காட்டும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இந்த தாக்குதல் “சிட்னியின் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

images bbc

NO COMMENTS

Exit mobile version