Home உலகம் அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள்

அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள்

0

அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கரை ஒதுங்கி சிக்கித் தவிக்கும் பைலட் திமிங்கிலங்களைக் காப்பாற்ற கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

160 பைலட் திமிங்கலங்கள்

அத்துடன் கரை ஒதுங்கிய 26 பைலட் திமிங்கிலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில் 160 பைலட் திமிங்கிலங்கள் நேற்று (25) காலை கரை ஒதுங்கியுள்ளன.

தாய்லாந்தில் கடும் வெப்பம் : 30 பேர் பரிதாபகரமாக உயிரிழப்பு

திமிங்கிலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சி

ஆபத்தான நிலையில் இருந்த 26 திமிங்கிலங்கள் கரையில் மூச்சு விடமுடியாமல் இறந்தன.

ஏனைய திமிங்கிலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு திமிங்கிலம் கரையில் தவறுதலாக மாட்டிக் கொண்ட நிலையில் அடுத்தடுத்து திமிங்கிலம் வரிசையாக கரையில் சிக்கி இருக்கலாம் என அந்நாட்டில் கடல்வாழ் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகரில் புகழ்பெற்ற கட்டடத்தில் நிகழ்ந்த அனர்த்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

https://www.youtube.com/embed/ZS7zOWr3GOQ

NO COMMENTS

Exit mobile version