Home உலகம் உலகையே அதிரவைக்கும் தங்க களஞ்சியம் : உகாண்டாவுக்கு புதிய பொற்காலம்

உலகையே அதிரவைக்கும் தங்க களஞ்சியம் : உகாண்டாவுக்கு புதிய பொற்காலம்

0

ஆபிரிக்க நாடான உகாண்டா நாடு (Uganda) தற்போது உலகையே அதிரவைக்கும் பெரும் தங்கச் செம்பு களஞ்சியத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

31 மில்லியன் மெட்ரிக் தொன் தங்கக் கண்ணி, அதில் இருந்து 320,000 தொன் தூய தங்கம் பெற முடியும் என கணிக்கப்படுகிறது.

இதன் மதிப்பு சுமார் 12 டிரில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது.

தங்க சந்தையை சீர்குலைத்தல் 

இந்த கண்டுபிடிப்பு வெற்றிகரமாக சுரங்க வேலை மற்றும் சுத்திகரிப்பு செயல்களுடன் முன்னேறினால், உகாண்டாவின் பொருளாதாரமே மாற்றமடையும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

உலகளவில் முதலீடுகள் வர வாய்ப்பு அதிகமாக இருப்பதுடன் தங்க சந்தையை சீர்குலைக்கும் அளவுக்கு இது விளைவுகள் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆபிரிக்காவின் வளத்தை உலகுக்கு மீண்டும் நிரூபிக்கும் இந்த கண்டுபிடிப்பு, உகாண்டாவின் எதிர்காலத்தை பொன்வழியில் நகர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்

NO COMMENTS

Exit mobile version