Home உலகம் காசாவில் மீட்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள்

காசாவில் மீட்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள்

0

காசாவின்(gaza) ரஃபாவில் போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய(israel) தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் 137 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காசாவின் பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள கொங்கிரீட் தரிசு நிலத்தின் கீழ் 10,000 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக திங்களன்று அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவிற்குள் நுழைந்த உதவி பாரவூர்திகள்

இஸ்ரேலிய அதிகாரிகளின் தகவல்களை மேற்கோள் காட்டி, ஐ.நா.வின் மனிதாபிமான அலுவலகம் நேற்று திங்களன்று 915 உதவி பாரவூர்திகள் காசாவிற்குள் நுழைந்ததாகக் கூறியது.

இஸ்ரேலிய படைகள் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தின் மீது 15 மாதங்களாக நடத்திய குண்டுவீச்சை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் தங்கள் பாழடைந்த வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர், மேலும் மிகவும் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிக்காக காத்திருக்கிறார்கள்.

47,035 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

ஒக்டோபர் 7, 2023 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 47,035 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 111,091 பேர் காயமடைந்துள்ளனர்.

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணிக்கு செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(19) அறிவித்தது. 

NO COMMENTS

Exit mobile version