Home உலகம் கனடாவில் கடன் செலுத்த தவறுவோர் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் கடன் செலுத்த தவறுவோர் தொடர்பில் வெளியான தகவல்

0

கனடாவில் (Canada) வீட்டுக் கடன், வாகன கடன்கள் மற்றும் கடன் அட்டை நிலுவைகள் செலுத்த தவறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்பு இழப்புகள் மற்றும் உணவு, வீட்டு வசதிகளின் உயர்ந்த செலவுகள் ஆகியவை இந்த நிலைமைக்கு காரணங்களாக Equifax Canada வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் அட்டை

இந்த ஆண்டு முதல் காலாண்டில் மட்டும் 14 இலட்சம் பேர் கடன் அட்டை கட்டணங்களை செலுத்த தவறியுள்ளனர்.

இது கடந்த ஆண்டைவிட 1.46 லட்சம் பேரினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இளம் மற்றும் குறைந்த வருமானம் உள்ள பயனாளர்களிடையே இந்த நிலைமை அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version