இஸ்ரேலுடனான யுத்தம் ஆரம்பித்த பின்னர் பலஸ்தீனிய போராளி அமைப்பான ஹமாஸ் புதிதாக 15000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்துக்கொண்டுள்ளது என அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் ஈரான் ஆதரவு அமைப்பு இஸ்ரேலிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக விளங்கலாம் என அமெரிக்க புலனாய்வு பிரிவுகள் குறிப்பிட்டுள்ளது.
இதேயளவன 15000 ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுடனான மோதலின் போது கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வு தெரிவித்துள்ளது.
அமெரிக்க புலனாய்வு
ஜோபைடன் நிர்வாகத்தின் இறுதிநாட்டிகளில் கிடைத்த தகவல்கள் உட்பட பல தகவல்கள் குறித்து அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் காங்கிரஸிற்கு பல தகவல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதில் வெற்றிபெற்றுள்ளது புதிதாக இணைக்கப்பட்டவர்களில் பலர் இளையவர்கள், எனவும் புதியவர்களிற்கு இன்னமும் பயிற்சிகள் வழங்கப்படவில்லை எனவும் அமெரிக்க புலனாய்வு தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கையை பூர்த்தி செய்த பின்னர் படைகளை மீளபெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,ஹமாஸ் மீள் எழுச்சி பெறுகின்றது பூர்த்தி செய்வதற்கு வேறு எந்த வெற்றிடமும் இல்லாததே இதற்கு காரணம் என அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
