Home இந்தியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

0

தாய்லாந்தில் (Thailand) இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை (Mumbai) விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இச் சோதனையில், தாய்லாந்தில் இருந்து மும்பை வந்த ஒரு பயணி 16 அரிய வகை பாம்புகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அரிய வகை பாம்புகள்

பயணியின் உடைமைகளில் இருந்து 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மீட்கப்பட்டதையடுத்து குறித்த பயணியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடத்தலுக்கு பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் விசாரித்துவருகின்றனர்.

வன உயிரின சட்டப்படி, பாம்புகளை, அவற்றின் வாழ்விடம் அமைந்துள்ள நாட்டுக்கே திரும்ப அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version