ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் (Volker Türk) இலங்கைப்பயணம் முடிவடைந்த மறுநாள் அமெரிக்க அரச தலைவரின் வெள்ளை மாளிகையின் வரவு செலவுத்திட்ட முகாமைத்துவ பணியகம் (Office of Management and Budget) வெளியிட்ட நிதிவெட்டுப் பரிந்துரை ஈழத்தமிழினத்துக்கு பாதகமாக கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
இலங்கை உட்பட சில நாடுகளில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்னகர்த்தப்படும் 20க்கு மேற்பட்ட திட்டங்களுக்கு நிதியளிக்கும் நாடுகளில் அமெரிக்கா இதுவரை முக்கியமாக இருந்தது.
ஆனால் தற்போது இந்தத் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதி நிறுத்தப்படவேண்டும் என்ற அடிப்படையில் வெள்ளை மாளிகை தற்போது இவ்வாறான கவலையை உருவாக்கியுள்ளது.
ஐ.நா மனித உரிமை அரங்கில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னகர்த்த முன்னணியில் நின்று அதற்கு அனுசரணை வழங்கிய அதே அமெரிக்காவில் டொனால்ட் ரம்ப்பின் (Donald Trump) ஆட்சி அமைந்ததும் இவ்வாறான ஒரு நிலைமை எழுந்துள்ளது.
இந்த விடயங்களையும் உள்ளடக்கிவருகிறது இன்றைய செய்திவீச்சு…..
https://www.youtube.com/embed/dEtbo449Yes
