Home உலகம் 400 பேருடன் புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்

400 பேருடன் புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்

0

அவுஸ்திரேலியாவைச்(australia) சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன் 400 பேருடன் புதிய நாடு ஒன்றை உருவாக்கி அனைவரையும் கவர்ந்துள்ளான்.

குரோஷியா -செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ்
என பெயர் சூட்டப்பட்ட நாட்டையே அந்த இளைஞன் உருவாக்கியுள்ளான்.

இவ்வாறு உருவாக்கிய நாட்டிற்கு தானே ஜனாதிபதி என அவன் அறிவித்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 உரிமை கோரப்படாத 125 ஏக்கர் நிலம்

இது குறித்து நியூயோர்க் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டானியல் ஜாக்சன் என்ற 20 வயது இளைஞன், குரோஷியா விற்கும் செர்பியாவிற்கும் இடையிலான டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உரிமை கோரப்படாத நிலத்தை வெர்டிஸ் குடியரசு நாடாக அறிவித்து அதன் ஜனாதிபதி தான் என தனக்கு தானே என அறிவித்துள்ளான்.

உலகின் இரண்டாவது சிறிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

அதன் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 குடிமக்களைக் கொண்டுள்ள இந்த சிறிய நாடு, இப்போது இத்தாலியில் உள்ள வத்திக்கான் நகரத்திற்குப் பிறகு உலகின் இரண்டாவது சிறிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரபூர்வ மொழிகள் ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

புதிய நாட்டை உருவாக்கிய இளைஞன் இணையத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளான்.

NO COMMENTS

Exit mobile version