Home உலகம் கனடாவில் பற்றி எரியும் காட்டுத்தீ : 3 மாகாணங்களில் உள்ள மக்கள் வெளியேற்றம்

கனடாவில் பற்றி எரியும் காட்டுத்தீ : 3 மாகாணங்களில் உள்ள மக்கள் வெளியேற்றம்

0

கனேடிய (Canada) மாகாணங்கள் மூன்றில் பரவிவரும் காட்டுத்தீ காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவின் மனித்தோபா, ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய மூன்று மாகாணங்களில் காட்டுத்தீ பரவிவருகிறது.

காட்டுத்தீ காரணமாக மூன்று மாகாணங்களிலுமாக சுமார் 25,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காட்டுத்தீ 

அதிகபட்சமாக, மனித்தோபாவில் சுமார் 17,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து சஸ்காட்செவன் மாகாணத்தில் சுமார் 8,000 பேரும் ஆல்பர்ட்டாவில் சுமார் 1,300 பேரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

காட்டுத்தீ காரணமாக கனடாவிலும், கனடா எல்லையிலுள்ள சில அமெரிக்க மாகாணங்களிலும் காற்றின் தரம்பாதிக்கப்பட்டுள்ளதுடன், புகை சூழ்ந்தும் காணப்படுவதால் சாலைகளில் பயணிக்க இயலாத நிலையும் உருவாகியுள்ளது.

கனடாவைப் பொருத்தவரை, மே முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் காட்டுத்தீ பரவும் காலகட்டமாகும்.

என்றாலும், 1990களுக்குப் பிறகு, காட்டுத்தீ காரணமாக இவ்வளவு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படுவது இது தான் முதல்துறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

https://www.youtube.com/embed/ZIwYqMrtGDU

NO COMMENTS

Exit mobile version