Home உலகம் பட்டத்தோடு வானில் பறந்த சிறுமி: வைரலாகும் காணொளி

பட்டத்தோடு வானில் பறந்த சிறுமி: வைரலாகும் காணொளி

0

தாய்வான் (Taiwan) நாட்டில் பட்டத்தின் வாலை பிடித்த 3 வயது சிறுமி வானில் பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவமானது தாய்வானில் நடாத்தப்பட்ட பட்டத் திருவிழாவின் போது இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பட்டத் திருவிழாவின் போது இராட்சத பட்டம் ஒன்றை, பறக்க வைக்க அங்கிருந்த அனைவரும் முயற்சி செய்துள்ளனர்.

வானில் பறந்த சிறுமி

இதனையடுத்து பட்டம் வானில் பறக்கும்போது, அதன் வாலை பிடித்துக் கொண்டிருந்த 3 வயது சிறுமியும், மேலே பறந்துள்ளார்.

பின்னர், காற்றின் வேகம் சீரான பிறகு, அந்த சிறுமி மீண்டும் கீழே விழுந்துள்ளார்.

பரிசோதனை

இதையடுத்து, சிறுமியை, அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, அவருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, விழா ஏற்பாட்டாளர்கள், குறித்த பட்டம் விடும் திருவிழாவை உடனடியாக நிறுத்தினார்கள்.

3 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம், தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version