Home முக்கியச் செய்திகள் இசை நிகழ்வை பார்க்க வந்த இளைஞர்,யுவதிகள் அதிரடியாக கைது

இசை நிகழ்வை பார்க்க வந்த இளைஞர்,யுவதிகள் அதிரடியாக கைது

0

மிரிஹான கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைக் காண வந்த 31 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 நேற்று(01) இரவு கிம்புலாவல கமதா என்ற இடத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைக் காண வந்த இளைஞர்கள் குழுவே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பல்வேறு வகையான போதைப்பொருட்கள் 

இந்த இசை நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மிரிஹான பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மிரிஹான காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களிடம் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

 சந்தேக நபர்கள் இன்று (02) நுகேகொட நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட உள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version