Home உலகம் ஜி7 கூட்டமைப்பின் 50ஆவது உச்சி மாநாடு ஆரம்பம்

ஜி7 கூட்டமைப்பின் 50ஆவது உச்சி மாநாடு ஆரம்பம்

0

 ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி (Italy) சென்றடைந்த அமெரிக்க (United States) அதிபர் ஜோ பைடனை (Joe Biden) அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி (Giorgia Meloni) வரவேற்றுள்ளார்.

அத்துடன், பிரித்தானிய (United Kingdom) பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak), பிரான்ஸ் (France) பிரதமர் இம்மானுவல் மேக்ரோன் (emmanuel macron), ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா (Fumio Kishida), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) மற்றும் ஜெர்மனி அதிபர் (Frank-Walter Steinmeier) ஆகியோரையும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றுள்ளார்.

ஜி7 கூட்டமைப்பின் 50 ஆவது உச்சி மாநாடு இன்று முதல் 15 ஆம் திகதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் (Apulia) நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹஜ் யாத்திரை 

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன் (Germany) மற்றும் கனடா (Canada), ஜப்பான் (Japan) ஆகிய நாடுகளை உள்ளடக்கி ஜி-7 அமைப்பு செயல்படுகிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உக்ரைன் (Ukraine) அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி காணொளி வாயிலாக மாநாட்டில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் தான் பங்கேற்கப் போவதில்லை என சவுதி அரேபியாவின் (Saudi Arabia) பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் ஆசிஸ் அல் சவுத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு அவர் கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.

அக் கடிதத்தில் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு நன்றி எனவும், தற்போது ஹஜ் யாத்திரை பணிகளை கவனிக்க வேண்டியுள்ளதனால் தன்னால் மாநாட்டில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version