Home உலகம் பிரித்தானிய அருங்காட்சியக கொள்ளை: வெளியான சிசிரிவி காணொளிகள்

பிரித்தானிய அருங்காட்சியக கொள்ளை: வெளியான சிசிரிவி காணொளிகள்

0

பிரித்தானிய அருங்காட்சியகமொன்றில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசிரிவி காணொளிகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவிலுள்ள பிரிஸ்டல் அருங்காட்சியகத்தில் கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இதில் இந்தியாவின் காலனித்துவ காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உட்பட 600 பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

பல்வேறு தரப்பு

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலையும் மற்றும் சிசிரிவி காட்சிகளையும் அந்நாட்டு காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம் குறித்து, தற்போது காவல்துறையினர் தகவல் வெளியிட்டு இருப்பதால் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version