Home உலகம் அமெரிக்காவில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இராணுவத்தினர்

அமெரிக்காவில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இராணுவத்தினர்

0

பென்டகனில் பணிபுரியும் 60 ஆயிரம் இராணுவ ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்த நாட்டில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

அரசாங்கத்தின் செலவை குறைக்கும் வகையில் அரசுத்துறைகளில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

இராணுவ தலைமை

உலகின் சக்தி வாய்ந்த இராணுவத்தை கொண்ட அமெரிக்காவின் இராணுவ தலைமை கட்டிடமாக பென்டகன் உள்ளது.

இந்த இராணுவ தலைமையிடத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

ட்ரம்ப் நிர்வாகம் 

இந்தநிலையில், பென்டகனில் பணிபுரியும் 60 ஆயிரம் இராணுவ ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தாமாக முன்வந்து பணியில் இருந்து விலகினால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனால் 20 ஆயிரம் பேர் தங்களுடைய பதவி விலகல் கடிதத்தை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version