Home உலகம் அமெரிக்காவை உலுக்கிய நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு – சுனாமி எச்சரிக்கை

அமெரிக்காவை உலுக்கிய நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு – சுனாமி எச்சரிக்கை

0

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 புள்ளிகளாக, அலாஸ்கா (Alaska) நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 12:37 மணிக்கு பதிவாகியுள்ளது.

இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை

நிலநடுக்கத்தின் மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிலிருந்து தெற்கே சுமார் 87 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

அலாஸ்காவின் கடற்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

எனினும், பிற்பகல் பிற்பகல் 2:45 மணிக்கு சுனாமி எச்சரிக்கை முற்றிலும் நீக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

https://www.youtube.com/embed/U6mP1tLDh3I

NO COMMENTS

Exit mobile version