2022ம் ஆண்டுக்கான இந்திய மத்திய அரசின் 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் (70th National Film Awards) டில்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.
இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன் 1’ (Ponniyin Selvan – 1) திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஒலிப்பதிவு என 4 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது.
பொன்னியின் செல்வன் பாகம் -1
அத்துடன், 2022-க்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ‘காந்தாரா’ படத்துக்காக ரிஷப் ஷெட்டி வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதினை நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) மற்றும் மானசி பரேக் (கட்ச் எக்ஸ்பிரஸ்) படங்களில் நடித்ததற்காகப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
திரைப்பட விருதுகள் பற்றிய முழு விபரம் பின்வருமாறு:
சிறந்த படம் – மலையாள படமான ஆட்டம்
சிறந்த தமிழ் படம் – பொன்னியின் செல்வன் பாகம் -1
சமூகம், சுற்றுச்சூழல் மதிப்புகளை விளக்கும் படம் – குஜராத்தி படமான (கட்ச் எக்ஸ்பிரஸ்)
சிறந்த பொழுதுபோக்கு படம் – காந்தாரா (கன்னடம்)
சிறந்த இயக்குநர் – சூரஜ் ஆர். பர்ஜத்யா (ஹிந்தி)
சிறந்த புதுமுக இயக்குநர் – ஃபௌஜா பிரமோத் குமார் (ஹரியாண்வி மொழி)
சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த துணை நடிகை – நீனா குப்தா (உஞ்சை)
சிறந்த துணை நடிகர் – பவன் ராஜ் மல்ஹோத்ரா (ஃபௌஜா)சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஸ்ரீபத் (மாளிகாபுரம்)
சிறந்த பின்னணி இசை
சிறந்த திரைக்கதை – ஆனந்த் ஏகார்ஷி (ஆட்டம்)
சிறந்த வசனம் – குல்மோஹர் (அர்பிதா முகர்ஜி, ராகுல் வி சிதெல்லா)
சிறந்த சண்டைக் கலை – அன்பறிவ் (கேஜிஎஃப் -2)
சிறந்த நடனம் – ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணன் (மேகம் கருக்காதா – திருச்சிற்றம்பலம்)
சிறந்த பாடலாசிரியர் – நௌசத் சதார் கான் (ஃபௌஜா)
சிறந்த பின்னணி பாடகி- பாம்பே ஜெயஸ்ரீ (சௌதி வெல்லக்கா சிசி.225/2009)
சிறந்த பின்னணி பாடகர் – அர்ஜித் சிங் (பிரம்மாஸ்திரா)
சிறந்த இசை – பிரிதம் (பிரம்மாஸ்திரா)
சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர். ரகுமான் (பொன்னியின் செல்வன் பாகம் 1)
சிறந்த இசை வடிவமைப்பாளர் – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் பாகம் 1)
சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் பாகம் 1)
சிறந்த ஒப்பனை – சோம்நாத் குண்டு (அபராஜிதோ)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – நிகி ஜோஷி (குட்ச் எக்ஸ்பிரஸ்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – ஆனந்தா அதியா (அபராஜிதோ)
சிறந்த படத் தொகுப்பாளர்- மகேஷ் புவனேந்த் (ஆட்டம்)