Home உலகம் 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டையோட்டுக்கு உருவம் கொடுத்த ஆய்வாளர்கள்…!

75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டையோட்டுக்கு உருவம் கொடுத்த ஆய்வாளர்கள்…!

0

ஈராக்கின் (Iraq) குர்திஸ்தானில் உள்ள ஒரு குகையில் கடந்த 2018-ம் ஆண்டு, பழமையான உடைந்த மண்டை ஓடு ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த மண்டை ஓடு சுமார் 75 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண்ணின் மண்டையோடு என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஷானிதர் இசட் என்று மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட குகையின் பெயரையே வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த மண்டையோட்டை அடிப்படையாகக் கொண்டு நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் உயிருடன் இருந்தபோது எப்படி இருந்திருப்பார் என்பதை விஞ்ஞானிகள் உருவகப்படுத்தியுள்ளனர்.

பூமிக்கு அருகில் மிக வேகமாகச் சுழலும் சிறுகோள்…எங்கே கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா!

முப்பரிமாணத் தோற்றம்

பின்னர் மண்டை ஓட்டின் தட்டையான, உடைந்த எச்சங்களை அடிப்படையாக வைத்து அப்பெண்ணின் முகம் உருவாக்கப்பட்டுள்ளது,இதன்போது தொல்லியல் ஆய்வில் கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த மண்டையோட்டுக்குரிய பெண்ணின் முகத்தினை உருவகப்படுத்துவதற்கு அந்த எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைக்கவேண்டியிருந்ததால் அதற்கு முன்பு, அந்த எலும்புத் துண்டுகளை ஆய்வாளர்கள் வலுப்படுத்தியுள்ளனர்.

பின்னர் வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையைச் சித்தரிக்கும் பேலியோ-ஆர்ட் நிபுணர்கள் நியாண்டர்தால் பெண்ணின் முகத்தின் முப்பரிமாணத் தோற்ற மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
  

செவ்வாய் கிரகத்தில் வசிக்கவுள்ள மனிதர்கள் ஆனால் வீடு பூமியில்…பின்னணி இதுதான்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

NO COMMENTS

Exit mobile version