Home உலகம் கனேடிய மாகாணம் ஒன்றில் மாணவர்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை

கனேடிய மாகாணம் ஒன்றில் மாணவர்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை

0

கனேடிய (Canada) மாகாணம் ஒன்றான பிரின்ஸ் ஆப் எட்வெர்ட் தீவில் (Prince Edward Island) மாணவர்களுக்கு வகுப்பறைகளில் தொலைபேசிகளை பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் வருடத்தில் இருந்து இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, குறித்த தடை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரின்ஸ் ஆப் எட்வர்ட் மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

தடைக்கான காரணம்

இதன் போது, தரம் 7 முதல் 12 வரையிலான மாணவர்கள் கல்வி நோக்கங்களுக்காக தொலைபேசிகளை பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், விசேட தேவையுடைய மற்றும் மருத்துவ தேவையுடைய மாணவர்களுக்கு தொலைபேசிகள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், தொலைபேசிகளை பயன்படுத்தி பல்வேறு முறைக்கேடான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தெரிய வந்ததையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version