Home உலகம் ஜேர்மனி சென்ற விமானம் துருக்கியில் திடீரென தரையிறக்கம் !

ஜேர்மனி சென்ற விமானம் துருக்கியில் திடீரென தரையிறக்கம் !

0

இந்தியாவிலிருந்து (India) ஜேர்மனி (Germany) நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மும்பை (Mumbai) விமான நிலையத்திலிருந்து நேற்று (06) Vistara விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஜேர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டது.

அதில், 234 பயணிகளும் மற்றும் 13 பணியாளர்களும் பயணித்துள்ளனர்.

விமானத்தில் வெடிகுண்டு 

இந்தநிலையில், விமானம் வானில் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தின் கழிவறையில் விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என எழுதப்பட்ட காகிதம் ஒன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக விமானம் துருக்கியிலுள்ள Erzurum நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.

அந்நகர அதிகாரிகள் உடனடியாக விமானத்தை சோதனையிட்டுள்ளார்கள்.

இதன்போது சோதனையில் விமானத்தில் சந்தேகத்துக்குரிய எந்த பொருட்களும் கிடைக்கவில்லை.

ஆகவே, வெடிகுண்டு மிரட்டல் ஒரு வதந்தி என தெரியவந்துள்ளது.

என்றாலும், Vistara விமான நிறுவனம், பயணிகளுக்காக மாற்று விமானம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version